டீப்ஃபேக் தொழில்நுட்பத்தால் நடிகைகள் முதல் பிரதமர் மோடி வரை போலி வீடியோ வெளியாகி வைரலாகி வரும் நிலையில், ‘சாட்ஜிபிடி’யை கண்டுப்பிடித்த ஓபன் ஏஐ நிறுவனத்தின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மென் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மனிதனின் வேலைகளை எளிமையாக்குகிறது. அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனின் வேலையை குறைக்கும் என்றே கூறப்படுகிறது. இதற்கிடையே, அண்மையில் புதிய தொழில்நுட்பமான சாட்ஜிபிடி ( ChatGPT) உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்தக்கட்ட புரட்சியாக பார்க்கப்படும் சாட்ஜிபிடி, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவும், சரளமாக உரையாடும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு எப்படி சமைப்பது என்பதில் தொடங்கி, கதை, கவிதை எழுதுவது வரை அனைத்து ஆலோசனைகளை இந்த சாட்ஜிபிடி செய்து விடுகிறது.
இந்த சாட்ஜிபிடியை, ஓபன் ஏ.ஐ.(Open AI) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. சாட்ஜிபிடி அறிமுகமானதை தொடர்ந்து டீப்ஃபேக் தொழில்நுட்பமும் இணையத்தில் வைரலாகி தனி புரட்சியை செய்து வருகிறது. அண்மையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவில் தொடர்ந்து பிரதமர் மோடியின் கர்பா நடனம் வரை டீப்ஃபேக் செய்யப்பட்டு போலி வீடியோ வெளியானது. இதனால், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தப்படுத்த கூடாது என எச்சரிக்கை விடுத்த பிரதமர் மோடி, இது தொடர்பாக தொழில்நுட்ப வல்லுநர்களிடம் ஆலோசிப்பதாகவும் எச்சரித்திருந்தார்.
இந்த சூழலில் சாட்ஜிடிபியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக சாம் ஆல்ட்மேன் திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக மட்டும் இல்லாமல் இணை நிறுவனமாக இருந்த சா, ஆல்ட்மேனிடம் வெளிப்படைத்தன்மை இல்லை என்பதால் அவர் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தில் விடுவிக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சாம் ஆல்ட்மேன் மீதான நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக கூறியுள்ள ஓபன் ஏ.ஐ. நிறுவனம், அவருக்கு பதிலாக புதிய சி.இ.ஓ.வை நியமித்துள்ளது. 34 வயதான மீரா மூர்த்தி, ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டுள்ளார். அல்பேனியா மற்றும் கனடாவில் கல்வி பயின்ற மீரா மூர்த்தி, சாட் ஜிபிடி உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தவர்.

