Spirit Airlines:இடுப்பு தெரிய ஆடை; விமானத்திலிருந்து இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள்!

Advertisements

ஆடை விவகாரத்தில் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட இளம்பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Advertisements

அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் நோக்கி ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

இதில், தாரா கெஹிடி மற்றும் தெரசா அராவுஜோ என்ற 2 இளம்பெண்கள் பயணித்துள்ளனர். இருவரும் உள்ளாடை தெரியும்படியும், வயிறு, இடுப்பு பகுதிகள் தெரியும்படி ஆடையுடன் இருந்துள்ளனர். இதனால் 2 பேரும் கீழே இறக்கி விடப்பட்டனர். இந்நிலையில் இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள பெண் நியாயம் கேட்டுள்ளார்.

அதில், என்னுடைய தோழிக்கும், எனக்கும் விமானத்தில் பயங்கர அனுபவம் நேரிட்டது. ஆண் பணியாளர் ஒருவர் நாங்கள் அணிந்திருந்த ஆடையைப் பார்த்து, வேறு ஆடையை மேலே அணியும்படி கூறினார். விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும், நாங்கள் அணிந்த ஆடையில் எந்தத் தவறும் இல்லை என்றே கூறினர்.

எங்கள் ஆடைகளும், ஆடை கட்டுப்பாட்டுக்கு எதிராக இல்லை. ஆனால், அந்த ஆண் ஊழியர், எந்தக் காரணமுமின்றி எங்களை வெளியேற்ற விரும்பினார். சக பயணிகள் எங்களைப் பாதுகாக்க முயன்றனர். ஆனால், விமான கண்காணிப்பாளர் ஒருவர் வந்து, விமானத்திலிருந்து இறங்கவில்லை எனில், போலீசை கூப்பிட வேண்டியிருக்கும் என மிரட்டலாகக் கூறினார்.

வேறு விமானத்தில் இடம் வாங்கி தரப்படும் என அவர் கூறினார். ஆனால், விமானத்திலிருந்து கீழே இறங்கிய பின்னர், விமானம் இல்லையெனக் கூறி விட்டார். கட்டண தொகையையும் திருப்பித் தரவில்லை. இதன்பின்னர், ஆயிரம் டாலர் செலவழித்து மற்றொரு விமானத்தில் நாங்கள் செல்ல வேண்டியிருந்தது.

விமானத்தில் ஏ.சி. செயல்பாட்டில் திருப்தி இல்லாத சூழலில் ஸ்வெட்டரை கழற்றி விட்டோம். வெளியே போகச் சொல்லும்போது, ஸ்வெட்டரை அணிந்து கொள்கிறோம் எனப் பல முறை கூறியும் அவர்கள் அதனைக் கேட்கவில்லை. ஆண் விமான பணியாளர் எங்களுடைய மேலாடைகளை விரும்பவில்லை என்பதற்காக நாங்கள் விமானத்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்டு இருக்கிறோம்.

எங்களைக் குற்றவாளிகள் போன்று நடத்தி விட்டனர் என்ற உணர்வே எங்களுக்கு ஏற்பட்டது. விமானத்தில் இருந்த அனைவரும் எங்களையே பார்த்தனர்.இந்தச் சம்பவத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என ஆதங்கம் தெரிவித்துள்ளார். ஆனால், விமான நிறுவன வலைதளத்தில்,

விமான பயணி போதிய முறையிலான ஆடையை அணியவில்லை என்றால், அல்லது யாருடைய ஆடை ஆபாச அல்லது இயற்கைக்கு எதிராக இருக்கிறது என்றால், விமானத்திலிருந்து அந்தப் பயணி கீழே இறக்கி விடப்படுவாரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *