சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேசத்தைச் சேர்ந்த 500-க்கு மேற்பட்டோர் கைது!!

Advertisements

குஜராத்தின் அகமதாபாத், சூரத் நகரங்களில் காவல்துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஐந்நூற்றுக்கு மேற்பட்டோரைக் கண்டறிந்து பிடித்துள்ளனர்.

அகமதாபாத்தில் குற்றப்பிரிவு, பொருளாதாரக் குற்றப்பிரிவு உள்ளிட்ட காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் இணைந்து அதிகாலை 3 மணிக்கு ஆய்வில் ஈடுபட்டனர். இதில் வங்கதேசத்தில் இருந்து வந்து சட்டவிரோதமாக அகமதாபாத்தில் குடியேறிய நானூற்றுக்கு மேற்பட்டோரைப் பிடித்துள்ளனர்.
இதேபோல் சூரத்தில் நேற்றிரவில் தொடங்கிய ஆய்வில் வங்கதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்டோர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் போலி ஆவணங்களைக் கொண்டு பல ஆண்டுகளாக அப்பகுதியில் குடியிருந்து வருவது தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின் இவர்களை வங்கதேசத்துக்குத் திருப்பி அனுப்ப உள்ளதாகக் காவல் ஆணையத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை இரண்டு நாட்களுக்குள் வெளியேற்ற வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஏராளமானோர் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *