Ratan Tata:தான் நலமுடன் உள்ளேன்..வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரத்தன் டாடா!

இந்தியாவின் பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா [86 வயது] ரத்த அழுத்தம் காரணமாக மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று இரவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் பரவின. அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் ஐசியுவில் சிகிச்சை பெற்று வருவதாகச் செய்திகள் பரவி வந்த நிலையில் தான் நலமுடன் உள்ளதாக ரத்தன் டாடா விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது உடல்நிலை குறித்து பரவி வரும் செய்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவை அனைத்தும் வதந்திகள்தான் என்பதை தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.

எனது வயது மற்றும் உடல் உபாதைகள் காரணமாகவே மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வந்தேன். எனவே ஊடகங்கள் பொய்யான தகவல்கள் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *