
நடிகை துஷாரா விஜயன் சமீப காலமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான ஃபோட்டோ சூட் நடத்தி, அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றார்.
தமிழில் குறைந்த படங்களில் நடித்துத் தன் மீது பெரும் கவனத்தை குவிக்கும் அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை துஷாரா விஜயன்.
தொடர்ந்து தைரியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் துஷாரா விஜயன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்துள்ளார். படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் சரண்யா.

கடைசியாக இவரது நடிப்பில் வெளியான படம் ராயன். இந்தப் படத்தில் தனுஷ்ஷின் தங்கையாக நடித்தார்.
வேட்டையனை அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் வீர தீரச் சூரன். இந்தப் படத்தில் விக்ரமின் மனைவியாக நடிக்கின்றார்.
வீர தீரச் சூரன் படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் கலைவாணியென அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சமீப காலமாகக் கொஞ்சம் கிளாமரான ஃபோட்டோ சூட்களை நடத்தி, அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து வருகின்றார்.
கடைசியாக அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தின் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் 8 லட்சத்து 40 ஆயிரம்பேர் பின் தொடருகின்றனர்.

