
அரக்கோணத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் நடைபெறும் எனவும் அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கோட்டாட்சியர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் “The Townhall” அரங்கில் கோட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் அரக்கோணம் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கட்சி வாக்கு சாவடி முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் இன்று முதல் டிசம்பர் 4 ஆம் தேதி வரை நடைபெறும் நிலையில், இப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.
அனைத்துக் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கோட்டாட்சியர் வெங்கடேசன் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் வெங்கடேசன் ,தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் எத்திராஜ் மற்றும் பல்வேறு கட்சியின் முகவர்கள் கலந்து கொண்டனர்.


