சிவராஜ்குமாரின் ‘பெயில்’ பட டிரெய்லர் வெளியீடு!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பெயில்’. இயக்குநர் பவன் வடேயார் இயக்கியுள்ள இப்படத்தை கேவின் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சஞ்சனா ஆனந்த், கோபாலகிருஷ்ண தேஷ்பாண்டே, ஜெயராம், சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாக ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 2-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிவராஜ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘பெயில்’ திரைப்படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லர் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ள நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *