Sattur Ramachandran: 1886 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவி!

Advertisements

தென்காசியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் 1886 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ் எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழங்கினார்.

தென்காசி மாவட்டம் இ.சி.ஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்களுடன் முதல்வர் முகாம் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் வருவாய் துறை அமைச்சர் கே.கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனம், தையல் இயந்திரம், வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாகத் தொழில் கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் 1886 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியை 77 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த ஆட்சியில் மக்களைத் தேடி அதிகாரிகள் சென்று தேடிய தேவையான உதவிகளைச் செய்து வரும் வகையில் திமுக ஆட்சி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மாவட்டத்தில் ஏழு கட்டங்களாக நடைபெற்ற 55 முகாமில் சுமார் 3022னுக்கள் பெறப்பட்டுள்ளது பெறப்பட்ட மனுக்களில் 3012 மனுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் , உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *