வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு நேர்ந்த அவலம்..!

தாராபுரம் அருகே 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக தூய்மை பணியாளரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பொன்னிவாடியைச் சேர்ந்த  சண்முகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர், அப்பகுதியில் வீட்டிற்குள் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார். இதன் பின்னர் சிறுமியின் பெற்றோர் வீட்டிற்கு திரும்பியபோது, நடந்த சம்பவத்தை தெரிவித்தார்.

 

இது தொடர்பாக பெற்றோர் தாராபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காரின் அடிப்படையில் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். ந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *