Advertisements

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கீரப்பாக்கத்தில் லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
திருக்கழுக்குன்றம் அடுத்த புல்லேரியைச் சேர்ந்த கோவிந்தராஜ், முடையூரைச் சேர்ந்த முத்து ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் செங்கல்பட்டு நோக்கிச் சென்றனர். கீரப்பாக்கத்தில் எதிரே வந்த லாரி மோதியதில் கோவிந்தராஜ், முத்து ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து வந்த திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டுக் கூறாய்வுக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கனரக வாகனம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Advertisements



