Tiruppur: கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்!

Advertisements

திருப்பூரில் சர்வதேச அளவிலான பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.இதில் 250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பிங்க் டீச்சர்ட் அணிந்துகைகளில்  பதாகைகள் ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்றுசர்வதேசஅளவிலானபெண்கள்தினம்உலகம்முழுவதும்கொண்டாடப்படுகிறது.அதன்படிபல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன, திருப்பூரில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய்குறித்த விழிப்புணர்வு பின்ங்கத்தான் ராலி ஊர்வலம் நடைபெற்றது.

இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தைத் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார், இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில்பிங்க் கலர் டி.சர்ட் அணிந்து கல்லூரி மாணவிகள் 250 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர், ஒவ்வொரு பெண்களும் மார்பக புற்றுநோய் அறிகுறிபற்றித் தெரிந்திருக்க வேண்டும்,

மிகப்பெரிய வழியில் பெண்களைப் பாதுகாக்க உடனே செயல்பட வேண்டும், புகையிலை தவிர்க்க வேண்டும், தீங்கு விளைவிக்கும் தன்மை உடைய ஆல்கஹால் தவிர்க்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கைகளில் ஏந்தி ஊர்வலமாகத் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டு மங்கலம் சாலை வழியாகச் சென்று திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நிறைவு செய்தனர்.

இந்த மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பவனவர், திருப்பூர் குமரன் கல்லூரி தாளாளர்டாக்டர் பி வசந்தி, மாநகர காவல் துணை ஆணையர் வனிதா உட்பட திரளானவர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தினத்தை முன்னிட்டு மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஊர்வலம். பின்ங்கத்தான் ராலி
250க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் பிங்க் டீச்சர்ட் அணிந்துகைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலத்தில் பங்கேற்பு.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *