Tirupati:தமிழக பக்தர்களைக் கவரும் வீட்டு இட்லி..திருப்பதியில் வீடுகளைத் தேடி செல்லும் பக்தர்கள்!

Advertisements

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவில் பகுதியில் நிறைய ஓட்டல்கள் உள்ளன. ஆனால் தமிழக பக்தர்களுக்கு ஏற்றதாக இங்குள்ள உணவுகள் இருப்பதில்லை காலை, பகல் என எப்போது சாப்பிட்டாலும் செரிமான பிரச்சனை இருக்கிறது.

இந்த நிலையில் தமிழக பக்தர்களைத் திருப்பதி மலையில் உள்ள வீட்டு இட்லி கடைகள் வெகுவாகக் கவர்ந்துள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோவிலிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் பாலாஜி காலனி என்ற பகுதி உள்ளது. இங்குள்ள வீடுகளின் முன்பு இட்லி கடைகள் வைத்துள்ளனர். காலையில் இட்லி, தோசை, பூரி, வடையெனச் சுடச்சுட கிடைக்கிறது.

தமிழக பக்தர்கள் வீட்டு இட்லிகளை தேடி சென்று ஆவி பறக்க ருசிக்கிறார்கள். ஒவ்வொரு கடைகள் முன்பும் 50-க்கும் மேற்பட்டோர் இட்லிக்காகக் காத்திருக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது. திருப்பதி மலையில் விற்பனை செய்யும் வீட்டு இட்லி கடைகள் உணவுகள் தரமாக உள்ளன. ருசியாகவும் இருக்கிறது. இந்தக் கடைகளைக் கோவில் அருகில் திறக்கவும் தேவஸ்தானம் அனுமதி வழங்க வேண்டும் எனத் தமிழக பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *