Tirunelveli: இளம்பெண் வெட்டிக்கொலை!

Advertisements

காதலிக்க மறுத்ததால் நெல்லையில் இளம்பெண் வெட்டிக்கொலை!

நெல்லையில் காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை: நெல்லை டவுனில் பேன்சி ஸ்டோரில் வேலை செய்த 18 வயது இளம்பெண் சந்தியா வெட்டிக்கொலை செய்யப்பட்டார். காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் நடைப்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. காதலிக்க மறுத்ததால் அந்தப் பெண்ணைக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

அந்தப் பெண் கடையிலிருந்து குடோனுக்கு பொருட்கள் எடுக்கச் சென்றபோது இந்தச் சம்பவம் அரங்கேறி உள்ளது. கடைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோயில் அருகே நடந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *