Delhi Cops: பெண் காவலரைக் கொலை செய்து நாடகமாடிய ஆண் காவலர்!

டில்லி காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று துணை காவல் ஆய்வாளராகப் பணியிலிருந்த பெண் காவலர் இரண்டு வருடங்களுக்கு முன்பு காணாமல் போனார்.

மோனிகா யாதவ் எனும் பெண் காவலர் வழக்கில் அவருடன் பணியாற்றிய  சுரேந்திர சிங்  ரானா எனும் காவலரைக் காவல்துறை கைது  செய்தது.

ரவீந்திர யாதவ் போலீஸ் கமிஷ்னர் கூறுகையில் ரானா, அவரின் சகலை, மற்றும் அவரின் நண்பர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

யாதவை கொலை செய்து வட டில்லியில் உள்ள ஒரு சாக்கடையில் அவரது உடலை வீசி விட்டத்தாகத் தெரிவித்தார். ரானா கூறிய தகவலின் படி  எலும்புகளைக் கைப்பற்றி டிஎன்ஏபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காவல் பயிற்சி கல்லூரியில் 2014-ல்  ஒன்றாகப் பயிற்சி பெற்றுள்ளனர்.  யாதவ் சப் இன்ஸ்பக்டர் தேர்வில் தேர்ச்சி பெற்று யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வந்துள்ளார். பயிற்சியின் போதே  யாதவை திருமணம் செய்து கொள்ள ரானா விரும்பியுள்ளார். ஆனால் யாதவோ நிராகரித்துள்ளார்.

அதனால் ஆத்திரமடைந்த ரானா, யாதவை தீர்த்துக் கட்ட திட்டமிட்டார். அதற்கான சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார் ரானா. அதே போல் அவரைப் பிந்தொடர்ந்து சென்று புராரி புஷ்கிதா எனும் இடத்தில் வைத்துத் திட்டம் தீட்டியபடியே கொன்று சாக்கடையில் வீசினார்.ஆனால் ரானா, யாதவ் உயிரோடு இருப்பதாகவே, யாதவின் பெற்றோர்களிடத்தில் கூறி வந்துள்ளான்.

ரானாவின்உறவினர், மற்றும்  அவனின் நண்பன்  என அனிவரும் உடந்தையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.யாதவ் செப்டம்பர் 8,2021 முதல்  காணாமல் போனது குறித்து அவரின் பெற்றோர் முகர்ஜி காவல் நிலையத்தில் அக்டோபர் 20, 2021-ல்  புகார் அளித்தனர்.
இரண்டு வருடங்களாக  விசாரித்தும் உள்ளூர் காவல் நிலையத்தாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து முதல் தகவல் அறிக்கையே  இந்த வருடம் ஏப்ரலில் தான் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் அரோரா தலைமையில் விசாரணையில் இடைவெளி ஏற்பட்ட பிறகு  வழக்கு க்ரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டு டிஜிபி சஞ்சய் பாட்டியாலா ஜூலை மாதம் விசாரணையைத் தொடங்கினார்.
யாதவைக் கொன்றபின்பு அவரின் வீட்டுக்குச் சென்று ஆறுதல் கூறுவது, போலி  போன் கால்கள் செய்வது, காவல்துறைக்கு சென்று விசாரிப்பது போன்ற செயல்களில் சிறிது சந்தேகமே வராது பார்த்துக் கொண்டான். மேலும் யாதவுக்கு  கொரோனா நோய் தாக்கப்பட்டது போலவும் ஒரு டாக்குமெண்ட் தயர் செய்து வைத்துள்ளான்.விசாரணை ரானா பக்கமும் திரும்பியது. அப்போது தவறாகப் போன் கால்கள், யாதவின்  ஏடிஎம் – ல் இருந்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றவாளி இவன் தானெனப் போலீஸ் உறுதி செய்த்தது. ஆனால் ரானாவின் போன் கால்களை ஆய்வு செய்த போலீசார் அவன் தில்லு, முல்லு  வேலைகள் அம்பலத்துக்க்கு வந்தது. குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில், உண்மையை ஒத்துக் கொண்ட ரானா கைது செய்யப்பட்டிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *