Thuthukudi : பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை.!

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மிதமான மழை பெய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையால் தூத்துக்குடி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்நிலையில் நேற்றிரவு முதல் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.

இன்று காலை ஆறரை மணி நிலவரப்படி திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய இடங்களில் மூன்று செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மணியாச்சி, மணியாச்சியில், குலசேகரன்பட்டினம் ஆகிய இடங்களில் 2 செண்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *