
தூத்துக்குடி மாவட்டம், மற்றும் மாநகர பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை, கோரம்பள்ளம் குளத்திலிருந்து 1500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், மற்றும் மாநகர பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக, பலத்த மழை பெய்து வருகிறது.இதனைத்தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தின் ஆரஞ்சு அலாட் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இடி மின்னலுடன் தொடர்ந்து, பலத்த மழை பெய்து கொண்டிருக்கின்றது.இந்நிலையில், கோரம்பள்ளம் குளத்தின் பாசனத்திற்கு தண்ணீர் வரக்கூடிய உப்பாற்று ஓடை பகுதிகளிலும், மழை அதிக அளவு பெய்ததால் உப்பாற்று ஓடை வழியாக கோரம்பள்ளம் குளத்திற்கு ஆயிரம் கன அடி தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக குளத்தின் பாதுகாப்பு கருதி 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.மேலும், கோரம்பள்ளம் குளத்தின் வடிகால் பகுதியில் வசிக்கும் பொது மக்கள், எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மழை நிலவரம் மிகவும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வெள்ள நீர் கட்டுப்பாடு செய்யப்பட்டு வருகிறது.


