Money Laundering Case: பண மோசடி வழக்கிலிருந்து விடுவிப்பு!

புதுடில்லி: கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரை, பண மோசடி வழக்கிலிருந்து விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இச்சோதனையில் கணக்கில் வராத ரூ.300 கோடி சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து கடந்த 2018ல் டிகே சிவக்குமார் மீது அமலாக்கத்துறையினர் பண மோசடி வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் கடந்த 2019ம் ஆண்டு அவரை, விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். டில்லி நீதிமன்றம் ஜாமினில் விடுதலை செய்தது. இந்த வழக்கு அரசியல் ரீதியில் புனையப்பட்டது எனச் சிவக்குமார் புகார் கூறியிருந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு, தன் மீதான பணமோசடி வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனச் சிவக்குமார் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிபதிகள், டிகே சிவக்குமாரை, பணமோசடி வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *