
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு, உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கவுன்சிலர்களின் தங்கள் பகுதியில் மக்கள் குறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியகுழுபெருந்தலைவர் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார்.
வட்டார வளர்ச்சி அலுவலர் கேசவலு முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு துணைதலைவர் கோமதி நிர்மல்ராஜ் வரவேற்றார். பிரிவு உதவி அலுவலர் அன்பு தீர்மானம் வாசித்தார்.
குடிநீர், சாலைவசதி, மின்விளக்கு, உள்ளிட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் கவுன்சிலர்களின் தங்கள் பகுதியில் மக்கள் குறைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், அலுவல பணியாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


