Chess Match: 1500 மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சதுரங்க போட்டி!

Advertisements

திருவள்ளூர் மாவட்ட சதுரங்க சங்கம் சார்பில் வெள்ளி விழாவை முன்னிட்டு அரண்வாயல்  பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மாபெரும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் சதுரங்க சங்கம் தொடங்கி 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு கிராமப்புற மாணவர்களை சதுரங்கப் போட்டியில் ஊக்கப்படுத்தும் வகையில்திருவள்ளூர் அடுத்த அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் சதுரங்கப் போட்டி நடைபெற்றது.

இப்போட்டியானது இரண்டு நாட்கள் நடைபெற்றது  அதில் 1500 மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் சதுரங்கப் போட்டிக்கான நிலம் ஒதுக்கிய இடத்தில் அரசு விரைவில் உள்ளரங்கம் கட்ட முயற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும்.மாணவர்களின் அறிவுத்திறனை அதிகரிக்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி நேரத்தில் சதுரங்க போட்டியும்  சேர்க்க வேண்டுமென திருவள்ளூர் மாவட்ட சதுரங்க போட்டி சங்கத்தின்  நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சதுரங்கம் போட்டி சங்கத்தின் தலைவர் பலராமன்பிரதியுஷா பொறியல் கல்லூரியின் முதல்வர் ரமேஷ் பாபு ஏ மேக்ஸ் சதுரங்க சங்கத்தின் தலைவர் சுஜய் சக்ரவர்த்தி கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பாளராக உலக சதுரங்கப் போட்டி வீரர் கார்த்திகேயன் முரளி மாணவர்களை பாராட்டி வாழ்த்தி பரிசுகளை வழங்கினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *