
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தித் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
பாரீஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செலே குரோப்பன் ஆகியோர் விளையாடினர்.
இந்தப் போட்டியில், தொடக்கத்திலிருந்து தீபிகா அதிரடியாக விளையாடிப் புள்ளிகள் சேர்ப்பில் ஈடுபட்டார். இதில், 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தித் தீபிகா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
இதே போன்று மற்றொரு போட்டியில், இந்தியாவின் பஜன் கவுர் மற்றும் இந்தோனேசியாவின் தியாநந்தா சோய்ருனிசா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில், இந்திய வீராங்கனை வெற்றி பெற்றால், அவரை எதிர்த்துத் தீபிகா விளையாடுவார்.


