Thirunallar Dharparanyeswarar Temple: குவிய தொடங்கிய பக்தர்கள்!

Advertisements

திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சனிப்பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவானுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது, இங்குச் சனிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

மேலும் இன்று சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு திருநள்ளாறில் சாமி தரிசனம் செய்யப் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் சனிபகவானை தரிசனம் செய்ய அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சனிபகவான் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

முன்னதாக நளன் தீர்த்த குளத்தில் குளித்து விநாயகரை வணங்கிச் சிதறு தேங்காய் உடைத்து பின்னர் ஸ்ரீ சனிபகவானை வழிப்பட்டு சென்றனர்.சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *