Viduthalai Chiruthaigal Katchi: ரயில் மறியல் போராட்டம்!

Advertisements

திருமாவளவன் உள்ளிட்ட 141பாராளுமன்ற உறுப்பினர்களைச் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை  கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மர்ம நபர்கள் புகை குண்டுகளை வீசுகிறார்கள் அவர்களை யார் என்ன என்று கேட்டுக் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் உள்பட 141 பாராளுமன்ற உறுப்பினர்களைதற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைக் கண்டித்தும்  எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டதற்காகவும், குண்டு வீசியவர்கள்அதற்கு காரணமானவர்களைகைது செய்யக்கோரியும்கேள்வி கேட்ட மக்களவை உறுப்பினர்களைத் தற்காலிக பணிநீக்கம் செய்ததைகண்டித்தும் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ரயில்வே சந்திப்பில்கடலூர் மைய மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் திருச்சி ஹவுராஅதி விரைவு வண்டியை மறித்து சர்வாதிகாரியாகச் செயல்படும் மத்திய பாஜக அரசையும் மோடி அரசையும் பதவி விலகக் கோரி 15 நிமிடங்கள் முழுக்கங்களிட்டுஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்பு ரயில்வே காவல்துறையினர் மற்றும் விருத்தாசலம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மறியலை கைவிட்டு சென்றனர்.தொடர்ந்து  மறியல் செய்தவர்கள் 50க்கும் மேற்பட்டோர்களை கைது செய்து பேருந்துகளில் ஏற்றி தனியார் மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *