Thirumalai Nayakkar Birthday: அரசு சார்பில்அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை!

Advertisements

அரசு சார்பில் நடைபெற்ற திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழாவில் மதுரை நாயக்கர் மஹால் முன்புறம் அமைந்துள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரையில் மாமன்னர் திருமலைநாயக்கரின் 441-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மதுரை ஜன 25: மதுரையில் மாமன்னர் திருமலைநாயக்கரின் 441-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு அன்னாரது திருவுருச்சிலைக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அரசு சார்பில் நடைபெற்ற திருமலைநாயக்கர் பிறந்தநாள் விழாவில் மதுரை நாயக்கர் மஹால் முன்புறம் அமைந்துள்ள திருமலை நாயக்கரின் திருவுருவ சிலைக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மதுரை மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன்வசந்த், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், தெற்கு சட்டமன்ற உறுப்பினர பூமிநாதன். துணை மேயர் நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *