
நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்றும் மக்கள் நலனே ஒரே இலக்கு; ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என்றுநாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சென்னை:பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் கடைசி நொடிவரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது.
பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “மைக்” சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.
மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகுச் சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டது.
நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் தானெனச் சீமான் வைத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* 40 தொகுதிகளிலும் ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட உள்ளோம்.
* கடைசி நொடிவரை போராடியும் விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.
* மைக் புரட்சியாளர்கள் பயன்படுத்திய ஒன்று. மைக் இல்லாமல் புரட்சியே இல்லை.
* சின்னம் மாற்றத்தால் எங்களுக்கு எந்தப் பின்னடைவும் இல்லை.
* மக்கள் நலனே ஒரே இலக்கு; ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன்.
* நல்ல அரசியலை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன் என்று கூறினார்.



