திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை – ஆதவ்

Advertisements
தவெக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மரிய வில்சன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து தவெக சார்பில் தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டிருந்தது. பொதுக்கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா திமுக கூட்டணியைக் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.
ஆதவ் பேசியதாவது, ”திமுக கூட்டணியில் மதிமுக சுய கௌரவத்தை இழந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இன்று வரைக்கு சீட் வாங்க முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறது. ஜவாஹிருல்லாவின் கட்சியை திமுக அ*ழித்துவிட்டது. திமுகவுக்கு தலித்துகளும் சிறுபான்மையினரும் அதிகாரத்துக்கு வருவது பிடிக்காது.
இவர்களை நம்பாதீர்கள் எனத் திருமா அண்ணனிடம் எவ்வளவோ சொன்னேன். ‘நம்மை வளரவிட மறுக்கிறார்கள். நாம் எந்த விதத்திலும் வலிமை பெறக்கூடாது என நினைக்கிறார்கள்’ என மனம் வருந்தி திருமா அண்ணன் பேசியிருக்கிறார்.
திருமா அண்ணன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் தான் வரவில்லை..
வேங்கைவயல் சம்பவத்தில் திருமா திமுக-வுக்கு எவ்வளவோ துணையாக இருந்தார். ஆனால், இப்போது 5 தொகுதியைக் கொடுத்து, ‘இருந்தால் இரு போனால் போ’ என்கின்றனர். திமுகவின் பண்ணையார்த்தனம்தான் இது. விசிகவை அ*ழிக்க திமுக தயாராகிவிட்டது.
திருமா அண்ணனின் வலி எங்களின் வலி. திருமாவின் கண்ணீருக்காகவே ஸ்டாலினுக்கு ஒரு முடிவை மக்கள் கொடுப்பார்கள்’ என்றார்.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *