ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு.!

Advertisements

பிரபல நடிகர் ஜீவா நடிக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பிரபல நடிகர் ஜீவா ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். வெற்றிப்பட இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் பரிதாபங்கள் சுதாகர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் புரோமோ வீடியோ மூலம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டனர். இதையடுத்து, படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் நடிகர் ஜீவாவின் ரசிகர்களிடையே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *