
திருபுவனை அருகே மதுபான கடையில் கத்தியைக் காட்டி மிரட்டி, பாம் போட்டு விடுவதாக மிரட்டிய ரவுடி மணி பாலனை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கத்தி மற்றும் செல்போனை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.
திருபுவனை அருகே உள்ள நல்லூர் பகுதியில் 7 ஹில்ஸ் என்ற மதுபான கடையில் நேற்று மாலை 6 மணி அளவில் புதுச்சேரி மூலக்குளம் ஜெ ஜெ நகர் பகுதியைச் சேர்ந்த நாகப்பன் மகன் மணிபாலன் 28 என்பவர் அந்த மதுபான கடையில் உள்ளே புகுந்து அங்கே பணியில் இருந்த கேசியர் ஆனந்த் 37 என்பவரைக் கத்தியைக் காட்டி மிரட்டி மதுபானங்களை கேட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து அவர் மதுபானங்களை கொடுக்க மறுக்கவே தன்னிடம் நாட்டு வெடிகுண்டு உள்ளது. அதனைக் கடையில் வீசி விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன கேசியர் ஆனந்த் திருபுவனை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார் தகவல் அறிந்து திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரவுடி மணி பாலனை கைது செய்து அவரிடம் இருந்த கத்தி மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் ரவுடி மணிபாலன் மீது ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் 2013இல் கொலை வழக்கும் மற்றும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் உயிருக்குப் பயந்து தனது குடும்பத்தாருடன் நல்லூர் அருகே உள்ள தமிழக பகுதியான விநாயகபுரம் பகுதியிலிருந்து வந்துள்ளார். அதனைத் தொடர்ந்து மணிபாலனை கைது செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.


