தமிழ்நாட்டில் சாதி , மத வன்முறைகள் இல்லை : மு.க.ஸ்டாலின் பேச்சு.!

பாஜக ஆளும் மாநிலங்களைப் போன்று தமிழ்நாட்டில் சாதி மோதல்களோ, மத வன்முறைகளோ இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்திலுள்ள ஒன்பது தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள், கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் ஆகியோரை ஆதரித்துத் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை செய்தார்.

உழவர் சந்தையில் நடைபெற்ற பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், தமிழ்நாட்டில் எந்தப் பகுதியிலும் சாதி வன்முறைகளோ, மதக் கலவரங்களோ இல்லை என்று குறிப்பிட்டார். உத்தரப் பிரதேசத்தைப் போல் குழு மோதல்களும் இல்லை என்று தெரிவித்தார்.

அதிமுக – பாஜக கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் பெயரை தட்சிணப் பிரதேசம் என்று மாற்றிவிடுவார்கள் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *