துரோகி என்ற வார்த்தைக்கு இ.பி.எஸ். பெயர்தான் ஞாபகம் வரும் – டிடிவி!

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைய நிலையில், நமது கட்சி கொள்கை வீரர்களின் கூடாரமாக விளங்குகிறது. பதவிக்காகவும், பணம் சேர்க்கும் நோக்கத்திற்காகவும் கட்சியைக் காட்சிப்படுத்த தயாராக இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகள் மற்றும் கற்பனைகள் காகித ஓடம் போலக் காலத்தால் அழிக்கப்பட்டுள்ளன.

ஓநாயும், வெள்ளாடும் ஒன்றாக இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை அடையுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது, முடியாது என்று நீங்கள் கூறுவது கேட்கப்படுகிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான பின்னணியில், டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதிலில், எடப்பாடி பழனிச்சாமி தன்னை தானே ஓநாயென ஒப்புக்கொள்கிறாரெனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *