WHOஇல் இருந்து வெளியேறியது அமெரிக்கா!

Advertisements

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ள செய்யும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்குள் உலக அமைப்பிலிருந்து விலகுவதாக அமெரிக்கா இரண்டாவது முறையாக உத்தரவிட்டுள்ளது.

குடியேற்றம் முதல் வெளியுறவுக் கொள்கை, பேச்சு சுதந்திரம், காலநிலை மாற்றம் வரையிலான பிரச்சினைகள்குறித்து இரண்டாவது முறையாக அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் டஜன் கணக்கான நிர்வாக நடவடிக்கைகளில் கையெழுத்திட்டார்.

தனது முதல் பதவிக் காலத்தின் இறுதி ஆண்டில் உலகளாவிய சுகாதார நெருக்கடியாக உருவெடுத்த கொரோனா பெருதொற்றுக்கு உலக சுகாதார அமைப்பு செயல்பட்ட விதத்திற்கு 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *