பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய தீண்டாமை!

Advertisements

பொங்கல் திருவிழாவை ஒட்டி மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தைப் புறக்கணித்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாலமேடு ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பட்டதாக எஸ்.பி. அலுவலகத்தில் அம்பேத்கர் பறையர் உறவின்முறை தலைவர் சந்தானம் புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில்,

* மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்த பட்டியலினத்தவர் காளைகள் புறக்கணிக்கப்பட்டன.

* ஜல்லிக்கட்டில் எங்களது சமூகத்தவர்களின் கோவில் காளைகளுக்கு மரியாதை அளிக்கவில்லை.

* ஜல்லிக்கட்டு போட்டியில் பட்டியலின சமூகத்தினரின் காளைகள் அவிழ்க்கத் தடை விதிக்கப்பட்டது.

* ஜல்லிக்கட்டு சாதிய பாகுபாடு பார்க்கப்பட்டதாக மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் குற்றம்சாட்டினர்.

* ஜல்லிக்கட்டு போட்டியில் ஊர் காளைகள் பிடிக்கப்பட்டாலும் பரிசுகள் வழங்கவில்லை.

ஜல்லிக்கட்டு போட்டியில் சாதிய பாகுபாட்டுடன் மாடுபிடி வீரர் தமிழரசன் அனுமதிக்காத நிலையில் விழா கமிட்டியிடம் கேட்டபோது போலீசார் அடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சாதிய பாகுபாட்டுடன் ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள்மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *