இன்று விடுமுறை நாளில் இயங்கிய பங்குச் சந்தை!

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகியவை வழக்கமாகத் திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் மட்டுமே செயல்படும்.

வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமாகப் பங்குச் சந்தை செயல்படாது.

ஆனால் இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் சனிக்கிழமையான இன்று மும்பை பங்கு சந்தையும், தேசிய பங்கு சந்தையும் செயல்பட்டன.

வழக்கமாகச் சனிக்கிழமை விடுமுறை என்றாலும், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் இன்று சனிக்கிழமை பங்குச் சந்தைகள் இயங்கின.

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளுக்கு ஏற்பப் பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு ஏதுவாக இன்று பங்குச் சந்தை செயல்பட்டன.

இதற்கு முன்பு 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போதும் சனிக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்கியது.

தற்போது 3-வது முறையாக இன்று சனிக்கிழமை பங்குச்சந்தை செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *