Rahul Gandhi:தெற்கிலிருந்து வடக்கு.. அனைவரின் குரல்களும் கேட்கப்படும்!

மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறினார். அதற்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டதற்கு திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் வாழ்த்து கூறியிருந்தார். “புதிய பொறுப்பை ஏற்றுள்ள ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி சார்பில் வரவேற்கிறேன். அவரது குரல் மக்கள் மன்றத்தில் (லோக்சபா) தொடர்ந்து பலமாக ஒலிக்கட்டும்” என ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

“அன்பு சகோதரர் ஸ்டாலின்” இதற்கு நன்றி தெரிவித்த பதிவிட்ட ராகுல் காந்தி, “என் அன்புச் சகோதரர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

தெற்கிலிருந்து வடக்கு வரை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குரலும் நாடாளுமன்றத்தில் கேட்கப்படுவதை உறுதி செய்வோம், மேலும், நமது அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கூட்டாட்சி அமைப்பை வலுப்படுத்துவோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *