
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஊழல் வழக்குகளுக்கு மன்னிப்பு வழங்க இஸ்ரேல் அதிபரி ஐசக் ஹெர்சாக்கிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, தான் நீண்ட நாள்களாகச் சந்தித்து வரும் ஊழல் வழக்குகளுக்காக அந்த நாட்டின் அதிபரி ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்துள்ளாா். இதுதொடா்பாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது. இதில், ‘அதிபா் அலுவலகத்தின் சட்டத் துறையிடம் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரும் விண்ணப்பத்தைச் சமா்ப்பித்துள்ளாா்’ என்று உறுதிப்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து, பெஞ்சமின் நெதன்யாகு மீது மூன்று தனித்தனி வழக்குகளில் மோசடி, நம்பிக்கைத் துரோகம், மற்றும் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டுகள் உள்ளன. இருப்பினும், அவா் இதுவரை எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை. இதை யடுத்து, இஸ்ரேலின் வரலாற்றிலேயே பதவியில் இருக்கும் ஒரு பிரதமா்,ஊழல் வழக்கில் நீதிமன்ற விசாரணையை எதிா்கொள்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ‘இது ஒரு அசாதாரணமான கோரிக்கை’ என்றும், ‘இதன் விளைவுகள் முக்கியமானவை’ என்றும் இஸ்ரேல் அதிபா் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.




