ஒருநாள் கிரிக்கெட் போட்டி:இந்தியா அணி வெற்றி..!

Advertisements

இந்தியா,தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றிப்பெற்றது.

இந்தியா,தென் ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதை தொடர்ந்து, முதலில் களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி 349 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியின் தரப்பில் அதிகபட்சமாக விராத் கோலி சிறப்பாக விளையாடி 135 ரன்களும் கே.எல்.ராகுல் 60 ரன்களும் எடுத்தனர். இதன் பின்னர் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 332 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியுற்றது. இதில், அதிகபட்சமாக ,பிரீட்ஸ்கே 72 ரன்களிலும் மார்கோ ஜான்சன் 70 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதை யடுத்து, இந்திய அணியின் பந்து வீச்சில் குல்திப் யாதவ் 4 விக்கெட்களையும்  ஹர்ஷித் ராணா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். மேலும், இந்த வெற்றியின் மூலம்  இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *