
சிலிண்டர் வெடித்து 2 பேர் பலி!
நாமக்கல் மாவட்டம் ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டில் சிலிண்டர் வெடித்து விபத்தில் 2 பேர்உயிரிழந்தனர். Namakkal
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் ஆஞ்சேநேயர் கோவில் அருகே உள்ள வீட்டினர் சிலிண்டர் வாங்கியுள்ளார்.பின்னர் அதனை மாற்றுவதற்கு சிலிண்டர் நிறுவன ஊழியர் அருண்குமார் என்பவரை அழைத்துள்ளனர். அதன் படி சிலிண்டரை அருண்குமார் மாற்றும்போது கேஸ் வெளியாகி உள்ளது. அப்போது அதனை அடைக்க முயலும்போது திடீரென அது வெடித்து சிதறியது.
இதில் வீட்டினும் இருந்த தனலட்சுமி, பார்த்தசாரதி, ருக்குமணி ஆகியோர் காயமடைந்தனர். இதில் தனலட்சுமி மற்றும் பார்த்தசாரதி படுகாயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருத்துமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விபத்துமூலம் தீ மளமளவென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. காஸ் நிறுவன ஊழியர் அருண்குமார் மற்றும் ருக்குமணி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.



