ஓடும் பேருந்தில் ஓட்டுநர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு!

இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கா் அருகே தனியாா் கல்லூரிப் பேருந்து ஓடிக்கொண்டிருந்தபோது ஓட்டுநர் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். அதிா்ஷ்டவசமாகக் கல்லூரி மாணவியர் காயமின்றித் தப்பினா்.
இன்று காலை திருத்தணியில் இருந்து ஆற்காடு மகாலட்சுமி கலை  அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் கல்லூரிப் பேருந்தில் சென்றனா். பேருந்தை ஆற்காட்டைச் சேர்ந்த ரவி என்பவா் ஓட்டி வந்துள்ளாா். சோளிங்கா் அடுத்த சம்புக்குளம் அருகே பேருந்து வந்து கொண்டிருந்த போது திடீரென ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.
இதனால் நிலைகுலைந்த ஓட்டுநர் பேருந்தைச் சாலையோரம் பள்ளத்தில் இறக்கி நிறுத்தியுள்ளாா். இதனால் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவியர் 12 பேரும் காயமின்றித் தப்பினர். இதனிடையே நெஞ்சுவலியால் ஓட்டுநர் ரவி இறந்தார்.தகவல் அறிந்து அங்குச் சென்ற கொண்டபாளையம் காவல்துறையினா்  நெஞ்சுவலியால் உயிரிழந்த ஓட்டுநர் ரவியின் உடலைக் கூறாய்வுக்காக வாலாஜாபேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *