பீதியின் உச்சத்தில் அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின்..! எகிறி அடித்த எடப்பாடி..!

Advertisements

அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியிருக்கும் நிலையில், ஆளும் கட்சியினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என பதிலடி கொடுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் அமித் ஷா அதிமுக தலைமையில் தான் கூட்டணி என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் என்றும் உறுதிப்பட சொல்லி உள்ளார்.சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் முழுதாக ஒரு ஆண்டு இருக்கும் நிலையில் தற்போதைய தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியை கடுமையாக விமர்சித்திருந்தார் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின். அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி என்பது தோல்விக் கூட்டணி.

பீதியின் உச்சத்தில் ஸ்டாலின் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் என பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தி.மு.க. தலைவரும், விடியா திமுக அரசின் முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் , தினமும் என்ன பிரச்சனை வரப்போகிறது என்று தன் தூக்கம் தொலைந்துவிட்டதாக ஒருமுறை திமுக பொதுக்குழுவில் சொன்னார்.நேற்று முன்தினம் அவருடைய அமைச்சர் பொன்முடியின் அருவருக்கத்தக்க ஆபாசப் பேச்சு அவர் தூக்கத்தை கெடுத்தது. இன்றோ, அஇஅதிமுக-வின் கூட்டணி அறிவிப்பு இடிபோல் வந்து அவருக்கு இறங்கியுள்ளது போலும்! பீதியின் உச்சத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தி.மு.க. செய்த வரலாற்றுப் பிழைகள் இந்த கூட்டணி மூலம் திருத்தி எழுதப்படும் என்று நேற்று நான் எனது எக்ஸ் பதிவு வாயிலாக தெரிவித்தேன். தமிழ்நாட்டு நலனுக்கான “குறைந்தபட்ச செயல் திட்டம்” இருக்கும் என மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா அவர்களும் அறிவித்திருந்தார். மணிப்பூர் மாநிலப் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு இருக்கும் அக்கறை, துளியாவது உங்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள், குறிப்பாக பெண்கள் மீது இருந்ததா? அவர்கள் பாதுகாப்பை குழிதோண்டி புதைத்த உங்களுக்கு சட்டம் ஒழுங்கு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது? “NEET என்றால் என்ன? அதனை இந்திய நாட்டிற்கே அறிமுகப்படுத்தியது யார்? அதனை உச்சநீதிமன்றம் வரை வாதாடி நிலைபெறச் செய்தது எந்த கூட்டணி?”- இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு, பிறகு நீட் பற்றி பேசுங்கள்! திரு.முக ஸ்டாலின் அவர்களே- நீங்கள் ஓட்டிய திரைப்பட ரீல் முடியும் நேரம் வந்துவிட்டது.

அதிமுக ஒருபோதும் தமிழ்நாட்டை, நம் மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காது.தமிழ்நாடு விரோத தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை தோலுரித்து, மக்களின் பேராதரவோடு அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடும்! ரெய்டுகளுக்கு பயந்து, “தொட்டுப் பார்- சீண்டிப் பார்” வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்!” என கூறியுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *