மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்..!

Advertisements

பொங்கல் பரிசுப் பணம் வழங்கத் தமிழக அரசிடம் நிதி இல்லை என்றால் மத்திய அரசு வழங்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

திருச்சி உறையூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குக் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வீரபாண்டியன், ஊரக வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றக்கூடாது என்றும், ஏழைகளுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் அந்தத் திட்டத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும்  தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து அவர் பொங்கல் பரிசுப் பணம் கட்டாயம் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், மக்கள் எவ்வளவு எதிர்பார்க்கிறார்களோ அதைத் தாராளமாகத் தமிழக அரசு தர வேண்டும் என்றும் கூறினார்.
பேட்டி ; வீரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *