சோனியா காந்திக்கு தமிழக முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து!

Advertisements

காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்குக் காங்கிரஸ் கட்சியினர், அரசியல் தலைவர்கள் மற்றும் பலர் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள். வலிமையான சவால்களை வழிநடத்துவது முதல் கருணையுடன் வழிநடத்துவது வரை, அவரது பயணம் பின்னடைவு மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாக நிற்கிறது. அவருக்கு வெற்றியும் அமைதியும் நிறைந்த நீண்ட, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்த்துகிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *