தமிழ்நாடு மாறியுள்ளதாக ஆளுநர் ரவி வேதனை..!

இந்தியாவில் தன்னுயிர் மாய்ப்புத் தலைநகரமாகத் தமிழ்நாடு மாறியுள்ளதாக ஆளுநர் ரவி வேதனை தெரிவித்தள்ளார்.

கோவை கவுண்டம்பாளையத்தில் தென்னிந்திய ஆய்வு மையம், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி ஆகியன இணைந்து ‘சிந்து சரஸ்வதி நாகரிகம் மாநாட்டை நடத்துகின்றன. இதில், சிந்து ஆற்றுக்கும் தமிழகத்தின் தாமிரபரணி ஆற்றுக்கும் இடையிலான ஆன்மிக மற்றும் நாகரிகத் தொடர்பு குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், உலக அளவில் ஆற்றங்கரைகளில் தான் நாகரிகங்கள் உருவாகியதாகவும், ஆறுகள் அழியும்போது நாகரிகங்களும் மறைந்து போய்விட்டதாகவும் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து அவர் தேசியக் குற்ற ஆவணத்தின் விவரப்படி தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் 65 பேர் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாக வேதனை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *