
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளில் 1197 மேம்பாலங்களைக் கட்டி முடித்துப் பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளதாகப் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெஇராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மூன்று பாலங்களைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் விழா மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்றது.
இதில் கைத்தறித் துறை அமைச்சர் காந்தி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் கலந்துகொண்டு நெமிலி கல்லாறு பாலம், பனப்பாக்கம் பண்ணியூர் பாலம், அன்வர்திகான் பேட்டை ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றைத் திறந்து வைத்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஆட்சிக்கு வந்தபோது தமிழகம் முழுவதும் 1281 தரைப்பாலங்கள் இருந்ததாகவும், நான்காண்டுகளில் 1197 பாலங்கள் மேம்பாலங்களாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் முனிரத்தினம், ஈஸ்வரப்பன், மாவட்ட கவுன்சிலர் சுந்தரம்மாள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் வடிவேலு, நிர்மலா, துணைத் தலைவர் புருஷோத்தமன், முன்னாள் துணைத் தலைவர் உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

