Lorry Accident: தண்ணீர் தொட்டி மீது டிப்பர் லாரி மோதி விபத்து!

ஆத்தூர் அருகே மல்லியகரையில் இருந்து ஆத்தூர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி தாண்டவராயபுரம் பகுதியில் குடியிருப்பு வீட்டின் தண்ணீர் தொட்டி மீது மோதி விபத்துகுள்ளானதில் ஓட்டுநர் கிளீனர் இரண்டு பேரும் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்து மல்லிகரை பகுதியில் இருந்து தாண்டவராயபுரம் பகுதியை சேர்ந்த ஓட்டுனர் மணிகண்டன்மற்றும் கிளீனர் இருவரும் ஆத்தூர் நோக்கி டிப்பர் லாரியில் சென்று கொண்டிருந்தபோது தாண்டவராயபுரம் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு அப்பகுதியில் பேரிகார்ட் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பெட்ரோல் பங்க் எதிரே வந்த டிப்பர் லாரி எதிர்பாராத விதமாக அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஓட்டுநர் கிளீனர் இருவரும் லாரியின் கண்ணாடி உடைத்து கீழே விழுந்ததில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். மேலும் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்ட நிலையில் ஓட்டுநர் கிளீனர் இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மல்லியகரை போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டு ஆத்தூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மது போதையில் டிப்பர் லாரியை வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *