Thalaivar 170: சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கும் நபர்!

Advertisements

ரஜினி 170 வது படத்தில் நடித்து வரும் நிலையில் அச்சு அசலாகச் சூப்பர் ஸ்டார் மாதிரியே இருக்கும் நபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் திரைப்படம் அண்மையில் ரிலீசாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து  த.செ. ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினியுடன் இணைந்து துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் பாசில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

தலைவர் படத்தின் முதல் நாள் ஷூட்டிங் திருவனந்தபுரத்தில் அதைத் தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு ரஜினி செல்லும் வீடியோக்களும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்தச் சூழலில் ரஜினியை போல் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

72 வயதாகும் ரஜினி மேக்கப் மற்றும் விக் இல்லாமல் சாதாரணமாக இருப்பதை போல் தோற்றமளிக்கும் நபர் பார்ப்பதற்கு அப்படியே ரஜினி போல் இருக்கிறார். இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்த புளூ சட்டை மாறன்,  ” க்ரீன் மேட்ல நடிச்சி, VFX லச்சண்ட போட்டு 100 கோடி, 150 கோடி வாங்கறார். அவருக்குப் பேரு தலீவர். ஒருத்தர் நிஜத்துல சண்ட போட்டு, அவுட்டோர் எல்லாம் போய்க் கஷ்டப்பட்டாலும் சம்பளம் 10 ஆயிரம், 20 ஆயிரம்தான். ஆனா அவருக்குப் பேரு டூப். டூப் நிரந்தரம்… மக்களுக்கு அல்வா கொடுக்கறோம்.  …” எனக் கலாய்ச்சி டிவீட் செய்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *