Terrorist Attack: ராணுவ வீரர் வீரமரணம்!

Advertisements

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளிடையே நடைபெற்றதுப்பாக்கிச்சண்டையில் ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். இதில், பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்…

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப்படையினருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நர்ஹல் பகுதியில் ராணுவம், போலீசார், பாதுகாப்புப்படையினர் திடீரெனத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, வனப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது திடீரெனத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதையடுத்து, பாதுகாப்புப்படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இரு தரப்பிற்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில், பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த மோதலின்போது ராணுவ வீரர் வீரமரணமடைந்தார். மேலும், பாதுகாப்புப்படையினர் 3 பேர் காயமடைந்தனர். என்கவுண்ட்டர் நடந்த பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதால் துப்பாக்கிச்சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *