Edappadi K. Palaniswami: “அய்யா காப்பாத்துங்க” நாளை டெல்லி பயணம்!!

Advertisements

 கொடநாடு கொலை கொள்ளை வழக்கு, அதிமுக நிர்வாகிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையெனப் பரபரப்பான நிலையில், நாளை டெல்லி செல்லும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.

தமிழ்நாடு செய்திகள்: வரும் 18 ஆம் தேதி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் துவங்க இருக்கிற நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நாளை டெல்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசியல் வட்டாரத்தில் இந்தச் சந்திப்பு முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமி திடீர் டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்திக்க இருப்பதால், அரசியல் வட்டாரத்தில் கவனத்தை பெற்றுள்ளது. மறுபுறம் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வரும் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாகப் பேசத் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார் எனவும் ஒருதரப்பினர் கூறி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, அக்கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் முழுமையாகப் பழனிசாமி வசம் வந்ததுள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தல், தேர்தலுக்கான கூட்டணி, குறிப்பாக ஒரே நாடு ஒரே தேர்தல், முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் போன்றவற்றை குறித்து இந்தச் சந்திப்பில் பேசலாம் எனவும் எதிர் பார்க்கப்படுகிறது.

அடுத்த வாரம் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில், அதுகுறித்த முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும், அதேபோல் கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து அவர்களுக்கான தொகுதி பங்கீடு முடிந்திருக்கிற நிலையில், தமிழகத்திலும் தொகுதி பங்கீடு குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *