
9 ஆண்டுகளுக்குப் பிறகு பாணதீர்த்த அருவிக்குச் செல்ல அனுமதி…
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள பாணதீர்த்த அருவியைப் பார்க்க 18ம் தேதி முதல் அனுமதியளித்துள்ளது. தமிழ்நாட்டின் காரையார் அணைக்குச் சற்று மேலே அமைந்துள்ள தாமிரபரணி ஆற்றின் பாணதீர்த்தம் நீர்வீழ்ச்சி பிரசித்திபெற்றது. அணை வழியாகப் படகு சவாரி மூலமாகச் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆனால் பல்வேறு காரணங்களாலும், வனத்துறையின் நெருக்கடியாலும் சுற்றுலா பயணிகள் அருவிக்குச் செல்லச் சுமார் 9 ஆண்டுகளுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து படகுகளும் அணையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் பாபநாசம் அணைக்கு மேல் உள்ள பாணதீர்த்த அருவியைப் பார்க்க வனத்துறை அனுமதித்துள்ளது. சுற்றுலா பயணிகள் காரில் சென்று பார்க்க ஏற்பாடு; நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

