
சென்னை:
08.02.2025 அன்று நடைபெறவிருக்கும் குரூப்2A சேவைகள் உட்பட வரவிருக்கும் தேர்வுகளுக்கான OMR விடைத்தாள்களின் மாதிரி நகல் இன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் tnpsc தேர்வாணையம் OMR விடைத்தாளில் ஒரு சில புதிய நடைமுறையினை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய OMR விடைத்தாளின் மாதிரி படமானது www.tnpsc.gov.in “OMR Answer Sheet – Sample” என்ற தலைப்பின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. வினாத்தொகுப்பு எண் வட்டங்கள் கருப்புநிற பேனாவினால் (hallpoint pen நிரப்புவது தொடர்பாகவும், மேலும், பக்கம்-1ல் பகுதி-ன் கீழ் உள்ள கண்காணிப்பாளரின் கையொப்பம் பக்கம்-2ல் பகுதி- 1ன் கீழ் மாற்றப்பட்டுள்ளதும் மாதிரி விடைத்தாளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தினால் நடத்தப்படும் இனிவரும் தேர்வினை எழுத வருவதற்கு முன்பு புதிய OMR விடைத்தாளின் மாதிரியைப் பார்த்து அறிந்து தேர்வு எழுத வருமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.
பணியிடங்கள்:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளின் ஆண்டுத் திட்டம் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாண்டுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வுகளுக்கான காலிப்பணியிட எண்ணிக்கை அத்தேர்வுகளுக்கான அறிவிக்கைகளில் தெரிவிக்கப்படும் எனவும் டிஎன்பிஎஸ்சி சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ம் ஆண்டுக்கான TNPSC தேர்வு அட்டவணை தேர்வாணையம் சார்பாக வெளியிட்டு உள்ளது. அதன்படி குரூப் 1 தேர்வு ஜூன் 15ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
குரூப் 4 தேர்வு ஜூலை 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு செப்டம்பர் 28ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் பின்வரும் அறிவுறுத்தலை வழங்கி உள்ளது:
1. தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்திக்கொள்வதற்காக மட்டும் இந்த உத்தேச ஆண்டுத் திட்டம் வெளியிடப்படுகிறது.
2. ஆண்டுத் திட்டத்தில் தேர்வுகள் சேர்க்கவோ அல்லது நீக்கவோ செய்யப்படலாம்.
3. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அறிவிக்கையில் வெளியிடப்படும்.
4. தேர்வுகளுக்கான பாடத் திட்டம் மற்றும் தேர்வுத் திட்டம் தேர்வாணைய இணையத்தில் (www.tnpsc.gov.in)வெளியிடப்பட்டுள்ளது. இவை அறிவிக்கை வெளியிடும் நாள்வரை மாற்றங்களுக்கு உட்பட்டது.
வேலைவாய்ப்பு அதிகரிப்பு:
இது போக குரூப்-4 பதவிக்கான காலிப் பணியிடங்களை 8,9325 அதிகரித்துள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. TNPSC குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களில் கூடுதலாக 2,208 இடங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தற்போது காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 8,932ஆக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்கள் இதன் மூலமே நிரப்பப்படும். குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 எனப் பல்வேறு நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கூடுதலாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் அரசுப் போட்டித் தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் தேர்வாக வேண்டும் என்பதை மையமாக வைத்து இந்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
ஆண்டுதோறும் 200 பேருக்கு உணவு இதன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தங்கும் விடுதியுடன் சிறப்புப் பயிற்சி வழங்க ₹12.90 லட்சம் ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாகச் சென்னை மயிலாப்பூரில் உள்ள எஸ்.ஐ. காது கேளாதோருக்கான மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
