Advertisements

தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள தனது அரசியல் ஆசான் திமுக தலைவரின் மக்கள் பணி என்றும் தொடரும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளப் பதிவில், தனக்கு மக்கள் பிரதிநிதி எனும் அங்கீகாரத்தை வழங்கி 10 ஆண்டுகளாகப் புதுப்புது அனுபவங்களைக் கொடுத்த தன் தாய்வீடான திருவெறும்பூர் தொகுதி மக்களுக்குத் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் எனும் பொறுப்புகள் கிடைக்க அடித்தளமிட்டதோடு மட்டுமின்றி, தங்களின் குடும்ப உறுப்பினராக ஏற்று, அன்பு காட்டுவது தற்போதைய தேர்தல் முடிவுகளால் ஒருபோதும் தடைபடப்போவதில்லை என்று கூறினார்.
எப்போதும்போல தனது தாய்வீட்டு மக்களைப் போற்றுவேன் என்றும், கொண்டாடுவேன் என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழ்நாட்டின் வரலாற்றில் தவிர்க்க முடியாத அளவிற்கான சாதனைத் திட்டங்களைத் தந்துள்ள தனது அரசியல் ஆசான் திமுக தலைவரின் மக்கள் பணி என்றும் தொடரும் என்று கூறினார்.
Advertisements



