Tenkasi : பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழப்பு..!

Advertisements

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் நேர்ந்த பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கடையநல்லூர் அருகே பேருந்து விபத்தில் ஆறு பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனைக்குள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளார். தென்காசி மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சரான சாத்தூர் ராமச்சந்திரனை நிகழ்விடத்திற்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விபத்து நேர்ந்த இடத்திலிருந்து பேசிய மாவட்ட ஆட்சியரை, அரசு மருத்துவமனைக்குச் சென்று, பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய உயர்தரச் சிகிச்சையை உறுதிசெய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.

இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். விபத்தில் காயமடைந்தோர் விரைந்து நலம்பெற அரசு துணை நிற்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், கடையநல்லூர் அருகே அச்சம்பட்டியில் இரண்டு தனியார் பேருந்துகள் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ வசதிகளையும் உடனே ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *